ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு
- 10 திசம்பர் 2017: ஒண்டுராசு தேர்தலை செல்லாததாக்க எதிர்கட்சிகள் கோரிக்கை
- 16 மே 2012: ஒந்துராசில் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் சடலமாக மீட்பு
- 15 பெப்பிரவரி 2012: ஹொண்டுராசு சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் 350க்கும் அதிகமானோர் உயிரிழப்பு
- 23 திசம்பர் 2011: செலாயாவை மீண்டும் அதிபராக்க ஹொண்டுராஸ் இடைக்கால அரசு இணக்கம்
புதன், மே 16, 2012
ஒந்துராசில் சென்ற வாரம் கடத்தப்பட்ட ஊடகவியலாளர் அல்பிரெடோ விலட்டோரோ என்பவர் தலைநகர் தெகுச்சிகல்ப்பாவுக்கு வெளியே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
வானொலி செய்தியாளரான விலட்டோரோ மே 9 ஆம் நாள் பணிக்குச் சென்று கொண்டிருந்தபோது இனந்தெரியாத இளைஞர்கள் சிலரால் கடத்தப்பட்டார். அவர் கடத்தப்பட்ட பின்னர் அவரது குடும்பத்தினரை கடத்தல்காரர்கள் தொடர்பு கொண்டதாகவும், ஆனாலும் எதுவித தகவலும் தெரிவிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். இவருக்குப் பல காலமாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன.
2009 ஆம் ஆண்டு இராணுவப் புரட்சியை அடுத்து நாட்டில் 200-இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.
சில நாட்களுக்கு முன்னர் ஊடகவியலாளரும் ஓரினச்சேர்க்கையாளர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தவருமான எரிக் மார்ட்டினெசு என்பவர் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார். இவர் கழுத்து நெரித்துக் கொலைசெய்யப்பட்டு தலைநகருக்கு வடக்கேயுள்ள ஒரு கிராம வீதியில் வீசி எறியப்பட்டிருந்தார்.
மூலம்
[தொகு]- Abducted Honduras reporter Alfredo Villatoro found dead, பிபிசி, மே 16, 2012