உள்ளடக்கத்துக்குச் செல்

பழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 5, 2010


இந்தியாவின் பழம்பெரும் மொழிகளில் ஒன்றான போ மொழி பேசிய கடைசி நபர் அந்தமான் தீவுகளில் தனது 85வது வயதில் இறந்துள்ளதாக பிரபல மொழியியல் நிபுணர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.


அந்தமான் நிக்கோபார் தீவுகள்

போ மொழி உலகின் மிகப் பழமையான மொழி என்பதால் போவா சர் (Boa Sr) என்ற பெண்ணின் இறப்பு ஒரு குறிப்பிடத்தக்கதாகும். இவரின் இறப்பு மூலம் போ மொழி உலகின் பழமையான மொழி முற்றாக அழிந்து விட்டதாகக் கருத முடியும் என பேராசிரியர் அன்வித்தா அபி தெரிவித்தார்.


அந்தமான் மொழிகள்ள் ஆப்பிரிக்காவில் இருந்து தோற்றம் பெற்ற்றதாகக் கருதப்படுகிறது. இவற்றில் சில சுமார் 70,000 ஆண்டுகள் பழமையானதாகும்.


"போவாவின் பெற்றோர் இற்றந்த பின்னர் இவரே அம்மொழியின் கடைசிப் பேச்சாலலராக 30 முதல் 40 ஆண்டுகளாக இருந்து வந்திருக்கிறார்" என பேராசிரியர் அபி தெரிவித்தார்.


இப்பெண்மணி பொதுவாகத் தனிமையிலேயே வாழ்ந்து வந்தவரென்றும், ஏனைய மக்களுடன் கதைப்பதற்கு இவர் அந்தமானிய இந்தி மொழியைக் கற்க வேண்டியிருந்ததென்றும் அவர் தெரிவித்தார்.


கடைசி மூன்று மாதங்களில் இரண்டு மொழிகள் அந்தமான் தீவுகளில் அழிந்திருக்கின்றன எனப் பேராசிரியை தெரிவித்தார்.

மூலம்