உள்ளடக்கத்துக்குச் செல்

மேற்கு வங்கக் கங்கைக் கரையில் கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் இறப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 15, 2010


இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் நேற்று வியாழனன்று நடந்த கங்காசாகர் மேளா என்கிற இந்து மத பண்டிகையின் ஒரு பகுதியாக பக்தர்கள் கங்கை நதியில் குளிக்கும் சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்தனர்.


மகர சங்கிராந்தி நாளில் கங்காசாகர் மேளாவுக்குச் செல்ல சாகர் தீவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த படகில் ஏறுவதற்கு பக்தர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டுக் கொண்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் இந்த நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


இந்த பண்டிகையானது, வட இந்திய நகரான ஹரித்துவாரில் நடக்கும் இதைவிட மிகப் பெரிய இந்துக்களின் பண்டிகையான கும்பமேளாவுடன் இந்த ஆண்டின் கங்காசாகர் பண்டிகையும் சேர்ந்து வந்திருக்கிறது.


மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கும்பமேளா மூன்று மாதகாலம் நீடிக்கும்.


கங்காசாகர் பகுதியில்தான் கங்கை நதி வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதனால் இந்த இடம் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது. மேலும் மகர சங்கராந்தி அன்று இங்கு ஸ்னானம் செய்வது சிறப்பாகக் கருதப்படுகிறது.


இந்த காலகட்டத்தில் கங்கை நதியில் குளித்தால் தங்களின் பாவங்கள் அனைத்தும் கழுவப்படும் என்று இந்துக்கள் நம்புகின்றனர்.


அக்டோபர் 2008 இல் ராஜஸ்தானில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் 224 பேர் கொல்லப்பட்டனர்.

மூலம்

[தொகு]