பேச்சு:வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக விக்கிப்பீடியா குரல்
தலைப்பைச் சேர்விக்கிப்பீடியா எதிர்ப்பது இரண்டு சட்ட முன்வரைவுகளை.
ஒன்று Stop Online Piracy Act bill இரண்டு Protect IP Act bill
”இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பது Stop Online Piracy Act bill என்பதன் மொழிபெயர்ப்பு முயற்சி என நினைக்கிறேன். இது சரியா?
இணையம் என்ற கலைச்சொல்லை இண்டர்நெட் என்பதற்கு மட்டும்தான் தமிழ்.நெட்டில் படைக்கப்பட்டது. சொல்லப் போனால், அதைப் படைத்த மலேசியத் தமிழர் “நயனம்” ஆசிரியர் கோமகன் (ராஜகுமாரன்), அதை தமிழ்.நெட் என்ற குழுமத்துக்கு மட்டும்தான் கருதினார் என நினைவு. ஆனால், அதை நாங்கள் இண்டர்நெட் என்பதற்கு இணையாகக் கருதி வழங்கி வந்துள்ளோம். அந்தக் கலைச்சொல்லை web, online, internet, Inter-Net என்று எல்லாவற்றிற்கும் புழங்குவது அதை நீர்த்துப் போக வைக்கிறது. அது சரியல்ல. Web க்கு வலை என்றும், internetக்கு இணையம் என்றும், Inter-Netக்கு வலைப்பின்னல் எனவும் Onlineக்குத் தடவழி என்றோ அல்லது வலைவழி என்றோ ஏன் வலைத்தடம் என்றோ சொல்லலாம். அதைக் கட்டாயம் இணையம் என்று சொல்லக் கூடாது.
அதே போல் Piracy என்பது திருட்டு அல்ல. பொதுவாக Sea Pirates என்பதைத் தமிழில் கடற் கொள்ளைக்காரர்கள் என்போம். அறிவுசார் சொத்துத் திருட்டு Intellectual property theft என்றும் சொல்லலாம்.
"இணையத் திருட்டு நிறுத்தல் சட்டம்” என்பதை விட ”வலைத்தடக் கொள்ளைத் தடைச் ச்ட்டம்” என்பது பொருந்தும் என நினைக்கிறேன். நிறுத்தல் என்றால் எடை போடுத்ல் என்று பொருள். நிறுத்துதல் என்றால் to stop எனப் பொருள் கொள்ளலாம்.
மணி மு. மணிவண்ணன்
- நன்றி மணிவண்ணன், உங்கள் ஆலோசனைக்கேற்பச் செய்தியில் திருத்தங்களைச் செய்துள்ளேன். விக்கிப்பீடியா கட்டுரையிலும் அதன் உரையாடல் பக்கத்தில் உங்கள் கருத்தைச் சேர்த்திருக்கிறேன். தங்கள் ஆதரவிற்கு நன்றி.--Kanags \பேச்சு 22:13, 18 ஜனவரி 2012 (UTC)
Start a discussion about வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக விக்கிப்பீடியா குரல்
Talk pages are where people discuss how to make content on விக்கிசெய்தி the best that it can be. You can use this page to start a discussion with others about how to improve வலைத்தடக் கொள்ளைத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக விக்கிப்பீடியா குரல்.