பேச்சு:சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
விக்கிசெய்தி இலிருந்து

பகுதி படிகம் என்று கூறுவது பொருந்தாது என்பது என் கருத்து. ஆங்கிலத்தில் குவாசிக்கிறிசிட்டல் (quasicrystal) என்றால் அரை, குறை, பாதி, படிகம் என்பது போல் பொருள் இருந்தாலும், இங்கே படிகம்போல் தோற்றம் அளிக்கும் ஆனால் மீண்டுமீண்டுவரும் ஒரேசீரடுக்கு பெற்ற படிக அமைப்பு கொள்ளாத ஒன்று என்பதே பொருள். --செல்வா 03:32, 6 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

நன்றி செல்வா, இச்செய்தி அவசரமாக எழுதியதில் நானே ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்தேன். சீரொன்றாப் படிகம் எனலாமா?--Kanags \பேச்சு 08:30, 6 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]
நன்றி கனகு சிறீதரன். மாற்றியதற்கும் நன்றி. சீரொன்றாப் படிகம் என்று சொல்லலாம் என்றுதான் நினைக்கின்றேன். இப்போதைக்கு இதுவே ஓரளவுக்குப் பொருத்தமான பெயராக எனக்குத் தெரிகின்றது. ஆங்கிலச் சொல்லும் சரியான தேர்வு இல்லை. அது ஒரு குறிமொழி அங்கு அவ்வளவே. --செல்வா 00:47, 7 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]