உள்ளடக்கத்துக்குச் செல்

சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியருக்கு 2011 வேதியியல் நோபல் பரிசு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், அக்டோபர் 5, 2011

குவாசிகிறிஸ்டல் எனப்படும் சீரொன்றாப் படிகத்தைக் கண்டுபிடித்த இசுரேலியரான டேனியல் செட்சுமன் என்பவருக்கு 2011 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


சீரொன்றாப் படிகங்களில் ஒன்று

இசுரேலிய தொழில்நுட்பக் கல்வி நிலையத்தைச் சேர்ந்த டேனியல் செட்சுமன் 10 மில்லியன் சுவீடியக் குரோனர்களை (£940,000) பரிசாகப் பெறுவார்.


அலுமீனியம், மங்கனீசு போன்ற உருக்கிய உலோகங்களை வெகு விரைவாகக் குளிரவைப்பதன் மூலம் பகுதிப்படிகங்களை செட்சுமன் உருவாக்கினார். நுண்ணோக்கியூடாக இவற்றை அவதானித்த போது வழமையான படிகம் போலல்லாமல், புதிய படிகங்கள் முழுமையாக வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும், அவற்றின் உருவவடிவம் சீராக அடுக்கப்பட்டிருக்கவில்லை. இதனைப் பார்க்க சீராக இருப்பது போல் தோற்றம் அளிக்கும் ஆனால் சீரொன்றாத படிகம். இதனாலேயே அவை quasicrystal என அழைக்கப்படுகின்றன. இவ்வகையான படிகங்கள் மிகவும் அழகானவை என வேதியியல் கழகத்தின் தலைவர் பேராசிரியர் டேவிட் பிலிப்ஸ் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]