உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் பேருந்து ஒன்று ஆற்றினுள் கவிழ்ந்ததில் 22 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

புதன், பெப்பிரவரி 17, 2010

இந்தியாவின் வடக்கில் உத்தரப் பிரதேசத்தில் திருமணச் சடங்கு ஒன்றில் கலந்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் அவர்கள் பயணம் செய்த பேருந்து ஆறு ஒன்றினுள் கவிந்து விபத்துக்குள்ளாகியதில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறையினர் தெரிவித்தனர்.


உத்தரப் பிரதேசம்

மாநிலத் தலைநகர் லக்னோவில் இருந்து 200 கிமீ தொலைவில் சலாவுன் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.


கிட்டத்தட்ட 70 பேரை ஏற்றிச் சென்ற பேருந்து நேற்றுப் பின்னிரவு பாகுன்ச் ஆற்றை தற்காலிகப் பாலம் ஒன்றின் மீதாகக் கடக்கையிலேயே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.


40 பயணிகள் பேருந்தின் பலகணிகளை உடைத்துக் கொண்டு தப்பி வெளியேறினர்.


ஆற்றில் மூழ்கிய பேருந்தினுள் இருந்து 22 பேரின் உடல்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்டன.


இப்படியான விபத்துக்கள் மூலம் இந்தியாவில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர். சீரான பாராமரிப்பற்ற பாதைகள், பழமையான வாகனங்கள், வாகன ஓட்டிகளின் கட்டுக்கடங்கா வேகம் போன்றவை இவ்விபத்துகளுக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

மூலம்

[தொகு]