லிபியாவின் தேசிய இடைக்காலப் பேரவைக்கு ஐ.நா அங்கீகாரம் வழங்கியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 19, 2011

லிபியாவின் தேசிய இடைக்கால அரசுக்கு ஐ.நா அங்கீகாரம் அளித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா பொதுக்குழுவில், கடாபி அரசை வீழ்த்திய லிபிய இடைக்கால அரசுக்கு ஐ.நா.வில் இடம் அளிப்பதற்கு ஆதரவாக 114 வாக்குகள் கிடைத்தன. எதிராக 17 வாக்குகள் கிடைத்தன. இந்தியா இடைக்கால அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.


லிபியாவுக்கு எதிரான பொருளாதார மற்றும் ராணுவ ரீதியான தடைகளைக் களைய இந்நடவடிக்கை பயன்படும். இதன்மூலம் போரால் சீரழிந்த லிபியாவின் பொருளாதார மற்றும் அரசியல் மீட்பு சாத்தியப்படும். ஐக்கிய நாடுகளின் இம்முடிவை அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்றுள்ளன.


மூலங்கள்[தொகு]