சிரியா மீதான இராணுவ நடவடிக்கைக்கு துருக்கிய நாடாளுமன்றம் அனுமதி
- 2 சனவரி 2017: துருக்கியின் இசுத்தான்புல் கேளிக்கை விடுதியில் நடந்த தாக்குதலில் 39 பேர் பலி
- 20 திசம்பர் 2016: துருக்கியின் உருசிய தூதர் அங்காராவில் படுகொலை செய்யப்பட்டார்
- 4 நவம்பர் 2016: குர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.
- 25 நவம்பர் 2015: உருசியப் போர் விமானத்தை துருக்கி சுட்டு வீழ்த்தியது
- 24 ஏப்பிரல் 2015: ஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நிகழ்வு நினைவு கூறப்படுகிறது
வியாழன், அக்டோபர் 4, 2012
துருக்கிய அரசு கேட்டுக் கொள்ளும் பட்சத்தில் துருக்கிய இராணுவம் சிரிய எல்லையைக் கடந்து அங்கு இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளுவதற்கு துருக்கிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிரிய எல்லையில் உள்ள துருக்கியக் கிராமம் ஒன்றின் மீது நேற்று புதன்கிழமை சிரிய இராணுவத்தினர் குண்டுத் தாக்குதல் மேறொண்டதில் மூன்று குழந்தைகள், இரண்டு பெண்கள் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த அவசர முடிவை துருக்கிய நாடாளுமன்றம் எடுத்துள்ளது. இம்முடிவுக்கு ஆதரவாக 320 வாக்குகளும், எதிராக 129 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இச்சட்டமுன்வரைவு மூலம் ஓராண்டு காலத்துக்கு சிரியாவுக்குள் இராணுவத்தை அனுப்பவும், அல்லது சிரியா மீது வான் தாக்குதல் நடத்தவும் அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும்,சிரியா மீது போரை அறிவிக்கும் திட்டம் தம்மிடம் இல்லை என துருக்கிய அரசு அறிவித்துள்ளது.
மூலம்
[தொகு]- Turkey's parliament authorises military action in Syria, பிபிசி, அக்டோபர் 4, 2012
- Turkey pounds Syria in reprisal for deadly fire, ஜோர்தான் டைம்சு, அக்டோபர் 4, 2012