பெரியார் பல்கலைக்கழகத்தில் ஊடக விழிப்புணர்வு சிறப்புச் சொற்பொழிவு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 9, 2012

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் சார்பில், இயற்பியல் துறையின் கருத்தரங்க அறையில் ஊடகங்கள் கட்டமைக்கும் உடல்நலம் என்னும் சிறப்புச்சொற்பொழிவு நேற்று திங்கட்கிழமை நடந்தது. இந்த சிறப்புச்சொற்பொழிவு நிகழ்வை பேராசிரியர்.மா.தமிழ்ப்பரிதி தொடங்கி வைத்தார்.


ஊடகங்கள் கட்டமைக்கும் உடல்நலம் என்னும் தலைப்பில் ஹீலர் அ. உமர் பாரூக் சிறப்புச் சொற்பொழிவை நிகழ்த்தினார். ஹீலர் அ. உமர் பாரூக் இன்றைய சூழலில், ஊடகங்கள் எவ்வாறு உடல்நலச் செய்திகளை கட்டமைக்கின்றன எனவும் அவற்றை எவ்வாறு பிரித்தரிய வேண்டும் என்றும் விளக்கினார்.


நிகழ்வின் இறுதியில், மாணவர்களின் ஐயங்களுக்கு ஹீலர் அ. உமர் பாரூக் விடையளித்தார். இந்நிகழ்வை பேராசிரியர் மா. தமிழ்ப்பரிதி ஒருங்கிணைத்தார். நிகழ்வில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையின் மாணவர்களும், பொதுமக்களும், ஹீலர்களும் கலந்து கொண்டனர்.