யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகை விநியோகர் மீது தாக்குதல், பத்திரிகைகளும் எரிப்பு
- 17 நவம்பர் 2013: பிரித்தானியப் பிரதமர் கேமரனின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணப் பயணம்
- 25 அக்டோபர் 2013: வட மாகாண சபையின் முதல் அமர்வு கைதடியில் புதிய கட்டடத்தில் தொடங்கியது
- 12 அக்டோபர் 2013: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் முதலமைச்சர் முன்னிலையில் பதவியேற்றனர்
- 7 அக்டோபர் 2013: வடமாகாண சபையின் முதலமைச்சராக சி. வி. விக்னேசுவரன் அரசுத்தலைவர் முன்னிலையில் பதவியேற்றார்
- 24 செப்டெம்பர் 2013: வட மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு சி. வி. விக்னேசுவரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவு
வியாழன், பெப்பிரவரி 7, 2013
யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் யாழ். தினக்குரல் பத்திரிகைகளை எடுத்துச் சென்ற விநியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.
குறித்த விநியோகத்தர் யாழ் நகரில் இருந்து பருத்தித்துறைக்கு விசையுந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது புத்தூர் சந்திக்கு அண்மையில் அவர் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. காயமடைந்த நிலையில் வீதியோரமாக நின்றிருந்த அவரை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.
தாக்குதல் நடந்த இடத்துக்கு விரைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் எரிந்த நிலையில் இருந்த விசையுந்தையும், பத்திரிகைகளையும் பார்வையிட்டார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். சென்ற மாதம் யாழ். உதயன் பத்திரிகைகள் வடமராட்சி குங்கர் கடையடிப்பகுதியில் வைத்து தீயிடப்பட்டது. ஊழியர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
மூலம்
[தொகு]- Thinakural distributor attacked, டெய்லிமிரர், பெப்ரவரி 7, 2013
- யாழில் தினக்குரல் பத்திரிகை விநியோகஸ்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல், வீரகேசரி, பெப்ரவரி 7, 2013
- யாழ்.தினக்குரல் தீக்கிரை பணியாளர் மீதும் தாக்குதல், தினக்குரல், பெப்ரவரி 7, 2013
- யாழ்.தினக்குரல் பணியாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்த புகைப்படங்கள், தினக்குரல், பெப்ரவரி 7, 2013