உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணத்தில் தினக்குரல் பத்திரிகை விநியோகர் மீது தாக்குதல், பத்திரிகைகளும் எரிப்பு

விக்கிசெய்தி இலிருந்து
யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து ஏனைய செய்திகள்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

வியாழன், பெப்பிரவரி 7, 2013

யாழ்ப்பாணத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் யாழ். தினக்குரல் பத்திரிகைகளை எடுத்துச் சென்ற விநியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டு அவர் எடுத்துச் சென்ற பத்திரிகைகளும் தீக்கிரையாக்கப்பட்டன.


குறித்த விநியோகத்தர் யாழ் நகரில் இருந்து பருத்தித்துறைக்கு விசையுந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது புத்தூர் சந்திக்கு அண்மையில் அவர் மீது இனந்தெரியாதவர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. காயமடைந்த நிலையில் வீதியோரமாக நின்றிருந்த அவரை பொதுமக்கள் காப்பாற்றி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.


தாக்குதல் நடந்த இடத்துக்கு விரைந்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் எரிந்த நிலையில் இருந்த விசையுந்தையும், பத்திரிகைகளையும் பார்வையிட்டார்.


கடந்த இரண்டு மாதங்களுக்குள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரண்டாவது சம்பவம் இதுவாகும். சென்ற மாதம் யாழ். உதயன் பத்திரிகைகள் வடமராட்சி குங்கர் கடையடிப்பகுதியில் வைத்து தீயிடப்பட்டது. ஊழியர் ஒருவரும் கடுமையாகத் தாக்கப்பட்டார்.


மூலம்[தொகு]