சிரியா நெருக்கடி: மார்ச் மாதத்தில் 6000 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 2, 2013

சிரியாவில் நிகழ்ந்த மோதல்களில், மார்ச் மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 6000 பேர் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தகவலை இங்கிலாந்தைத் தளமாகக் கொண்டு செயல்படும் 'சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையம்' தெரிவித்துள்ளது.


கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 291 பெண்களும் 298 சிறுவர்களும் அடங்குவர். மேலும் 1,486 போராளிகளும் முன்னாள் இராணுவத்தினரும், 1,464 சிரிய இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் அடையாலம் தெரியாதோர் ஆவர்.


சிரியாவில் அனைத்துத் தரப்பினராலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை இக்குழு கண்காணித்து வருகிறது. இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை தம்மால் அறிவிக்கப்பட்ட 62,554 இறப்புகளை விட அதிகமாகும் எனவும் அக்குழு அறிவித்துள்ளது. "120,000 பேர் இதுவரையில் இறந்திருக்கலாம் என நாம் மதிப்பிட்டுள்ளோர்," சிரியாவின் மனித உரிமைகளுக்கான அவதான நிலையத்தின் தலைவர் ராமி அப்தல்ரகுமான் கூறினார்.


சிரியாவில் இரண்டாண்டுகளுக்கு முன்னர் அரசுக்கு எதிரான கிளர்ச்சி ஆரம்பித்ததில் இருந்து 70,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.


மூலம்[தொகு]