மலேசியாவின் போர்னியோவில் படகு மூழ்கியது, பலரைக் காணவில்லை

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 28, 2013

மலேசியாவின் போர்னியோவில் ஆறு ஒன்றில் சென்று கொண்டிருந்த படகு ஒன்று பாறைகளுடன் மோதி மூழ்கியதில் குறைந்தது 21 பேரைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.


போர்னியோ தீவு

74 பேரை மட்டுமே பயணம் செய்யக்கூடிய இப்படகில் நூறுக்கும் அதிகமானோர் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ராஜாங்கு ஆற்றில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 09:00 மணியளவில் இப்படகு மூழ்கியதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இப்படகில் பெண்கள், மற்றும் குழந்தைகளும் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது.


சர்வாக் மாநிலத்தில் தாயக் பழங்குடி மக்களின் முக்கியமான காவாய் பண்டிகைக்காகச் சென்று இப்படகு சென்று கொண்டிருந்தது. இறந்தவர்கள் பற்றிய தகவல்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. 20 முதல் 30 பேர் வரையில் படகினுள் சிக்குண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


போர்னியோ தீவு மூன்று நாடுகளிடையே பங்கிடப்பட்டுள்ளது. தெற்குப் பகுதி இந்தோனேசியாவிற்கும், வடக்கே இரண்டு மாநிலங்கள் மலேசியாவிற்கும், வடகரை ஒரு சிறிய பகுதி புருணைக்கும் சொந்தமானவையாகும்.


மூலம்[தொகு]