உள்ளடக்கத்துக்குச் செல்

உலகில் பணக்காரர்கள் அதிகம் உள்ள நாடு கத்தார்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 12, 2013


உலக நாடுகளில் பணக்காரர்கள் அதிகம் வாழும் நாடுகளில் கத்தார் முதலிடத்தில் உள்ளது என்று சமீபத்தில் வெளியான ஆய்வில் தெரிய வந்துள்ளது. துபாயைச் சேர்ந்த பாஸ்டன் ஆலோசனைக்குழுவின் 13-ம் ஆண்டு ஆய்வறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது.


உலகில் எண்ணெய் வளம் நிறைந்த நாடுகளில் ஒன்று கத்தார் ஆகும். இங்கு ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 143 பேர் ஒரு கோடிக்கும் அதிகமான சொத்துக்கள் உடையவர்களாக உள்ளனர்.


இந்நிலையில் மற்ற அரபு நாடுகளில் ஒன்றான குவைத் பணக்காரர்கள் வாழும் பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 11.5 சதவிகித பணக்காரர்கள் உள்ளனர். பஹ்ரைன் - 4.9 விழுக்காடு பணக்காரர்களுடன் 7வது இடத்தில் உள்ளது.


மேலும் ஐக்கிய அரபு அமீரகம் விழுக்காடு பணக்காரர்களுடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளது என்று பாஸ்டன் ஆலோசனைக்குழுவின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்தி உள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டில், மத்தியக் கிழக்கு நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் பணக்காரர்களின் வளர்ச்சி விகிதம் 9.1 என்ற சதவிகிதத்தில் இரு மடங்கு ஆகியுள்ளது. மேலும் 2017ஆம் ஆண்டிற்குள், இந்த இரு நாடுகளின் தனியார் சொத்து மதிப்பானது 6.5 டிரில்லியன் டாலர் என்ற அளவை எட்டக்கூடும் எனவும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கப் போவது எண்ணெய் வளத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் திறனாகும் என்றும் அந்த ஆய்வறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது.


பாஸ்டன் ஆலோசனைக் குழுவானது உலக அளவில் வியாபார உத்திகளுக்கும் மற்றும் நிர்வாக மேம்பாட்டிற்கும் ஆலோசனை மையமாகச் செயல்பட்டு வருகின்றது.


மூலம்

[தொகு]