தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
- 4 சனவரி 2018: தென் ஆப்பிரிக்க தொடருந்து விபத்தில் குறைந்தது 14 பேர் பலி
- 13 ஏப்பிரல் 2014: தென்னாப்பிரிக்காவின் அரசுப் பள்ளிகளில் மீண்டும் தமிழ் மொழிப்பாடம் கற்றுத் தரப்படும்
- 11 திசம்பர் 2013: நெல்சன் மண்டேலாவின் உடலுக்கு உலகத் தலைவர்கள் அஞ்சலி
- 6 திசம்பர் 2013: தென்னாப்பிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா காலமானார்
- 13 சூன் 2013: தென்னாப்பிரிக்க முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு தொடர்ந்து சிகிச்சை
வியாழன், சூன் 13, 2013
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா, தொடர்ந்து ஐந்தாவது நாளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
94 வயதான மண்டேலா ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள பிரிட்டோரியா மருத்துவமனையில் ஆறாவது நாளாகத் தங்கியிருந்து நுரையீரல் தொற்றுநோய் தொடர்பான சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அவரது மகள்கள் மகஜியா, செனானி ஆகியோர் உடனிருந்து கவனித்து வருகின்றனர். தங்களது தந்தை உடல்நலம் பெற பிரார்த்தனை செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மண்டேலா வெள்ளையின சிறுபான்மை அரசுக்கு எதிரான போராட்டத்துக்குத் தலைமை வகித்தவர். தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அரசுத்தலைவராக 1994 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்தாண்டுகளின் பின்னர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில் பொது வாழ்வில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்ட நெல்சன் மண்டேலா அதன் பின்னர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதைத் தவிர்த்துக் கொண்டார்.
மூலம்
[தொகு]- Nelson Mandela responding better to treatment, சிபிசி, ஜூன் 12, 2013
- Nelson Mandela: South Africa welcomes 'progress', பிபிசி, ஜூன் 13 2013