அமெரிக்காவுடன் பேச்சு நடத்த வடகொரியா விருப்பம்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூன் 17, 2013

அமெரிக்காவுடன் உயர்மட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட தமது நாடு தயாராய் உள்ளது என வடகொரியா விருப்பம் தெரிவித்துள்ளது.


அமெரிக்காவுடன் பிராந்தியப் பாதுகாப்புப் பற்றித் தாம் பேச விரும்புவதாக வடகொரியா கூறுகிறது. ஆனால், இதற்கு அமெரிக்கா முன்நிபந்தனை எதுவும் விதிக்கக்கூடாது என அதஎச்சரித்துள்ளது.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அமெரிக்கப் பேச்சாளர், "வடகொரியாவை அதன் நடவடிக்கைகள் மூலமே நாம் அதன் மீது நாம் நம்பிக்கை வைக்கலாம், வெறும் பேச்சுக்களினால் அல்ல," எனக் கூறினார்.


கடந்த வாரம் தென்கொரியாவுடன் நடத்த இருந்த பேச்சுவார்த்தையினை வடகொரியா திடீரென முறித்துக் கொண்டதை அடுத்து வடகொரியாவின் இந்தப் புதிய அறிவிப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை வெளிவந்துள்ளது.


கொரியத் தீபகற்பத்தில் தற்போது நிலவும் இறுக்கமான சூழ்நிலைகளைக் குறைக்கவும், இடைக்கால போர் ஒப்பந்தத்தை அமைதி ஒப்பந்தமாக மாற்றவும், அணுவாற்றல் குறித்து நேர்மையான முறையில் விவாதிக்க விரும்புவதாகவும் வடகொரியா கூறியிருக்கின்றது.


இவ்வாண்டின் ஆரம்பத்தில் வடகொரியா தனது மூன்றாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியதை அடுத்து இரு கொரிய நாடுகளுக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.


மூலம்[தொகு]