சேலம் ‘படைப்பாளர் பேரவை’ நிகழ்த்தும் பெரியார், அண்ணா பிறந்தநாள் விழாப் போட்டிகள்
- 12 செப்டெம்பர் 2020: தமிழகத்தில் செப்.30 வரை தளர்வுகளுடன் இ-பாஸ் இல்லாத பொது முடக்கம் நீட்டிப்பு
- 27 மே 2018: தூத்துக்குடி செய்தி இன்று
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 16 பெப்பிரவரி 2018: காவிரி நீரில் தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீர் வழங்க உச்ச நீதிமன்றம் ஆணை
- 6 பெப்பிரவரி 2018: நாட்டுபுறவியல் உதவி பேராசிரியர் பணி நாட்டுபுறவியல் மாணவர்களுக்கே
திங்கள், ஆகத்து 19, 2013
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு, சேலம் ‘படைப்பாளர் பேரவை’ கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி, பொதுமக்கள் பங்குபெறும் பாடல் (கவிதை) போட்டி, பெரியார், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை பரிந்துரைக்கவும் கோரியுள்ளது.
மேற்படி விழாவை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி (5 மணித்துளிகள்) விழாவன்று நிகழ்த்தப்பெறும் என்றும் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும் எனவும், சிறந்த படைப்புக்களுக்குப் பரிசும் சான்றும் வழங்கப்பெறும் என்றும் சிறந்த பாடல்களைத் தொகுத்து நூல்வடிவமாக்க முயற்சிக்கப்படும் எனவும், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை 30/08/2013க்குள் பரிந்துரைக்கலாம் என சேலம் படைப்பாளர் பேரவையின் செயலர் இலா. வின்சென்ட், பொருளர் ஆசிரியர் வை.ந மற்றும் தலைவர் பாவலர் எழுஞாயிறு அறிவித்துள்ளனர்.
போட்டி விதிமுறைகள்: பேச்சுப்போட்டித் தலைப்பு- என் பார்வையில் பெரியார், என் பார்வையில் அண்ணா என்னும் ஏதேனும் ஒரு தலைப்பில் ஒன்றைப்பற்றிப் பேசலாம். பொதுமக்கள் பங்குபெறும் பாடல் (கவிதை) போட்டியில் பங்கேற்க விரும்புவோர் பாடல் ஒரு பக்க அளவில் பாடலை வழங்கலாம். பாடல்களில் பெரியார், அண்ணா பற்றிய மதிப்பீடுகள் இடம் பெறவேண்டும். பாடல்கள், பெரியார், அண்ணா விருதுகளைப் பெறத் தகுதிமிக்க சான்றோர்களின் பெயர்களை 30/08/2013க்குள் பேரவை முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விடுக்க வேண்டும்.தொடர்பு முகவரி: படைப்பாளர் பேரவை, சுரதா கூடம், 64/10 காளியப்பர் குடியிருப்பு, பெரமனூர், சேலம் – 636007.