உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் பதினாறாவது மக்களவைக்கான தேர்தல் அட்டவணை அறிவிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மார்ச்சு 6, 2014

இந்தியாவின் 16ஆவது மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை இந்தியத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதன்படி, ஏப்ரல் 7 முதல் மே 12 வரை ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடைபெறும். மே 16 அன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


புது தில்லியில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், மக்களவைத் தேர்தலுக்கான முழுமையான தேர்தல் அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையர் வி. எஸ். சம்பத் வெளியிட்டார். இச்சந்திப்பின்போது தேர்தல் ஆணையர்கள் கைச். எஸ். பிரம்மா, எஸ். என். ஏ. ஜைதி ஆகியோரும் இருந்தனர். ஆந்திரா, ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைக்கான தேர்தல் அட்டவணையும், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குரிய இடைத்தேர்தல் அட்டவணையும் அப்போது வெளியிடப்பட்டன.



மூலம்

[தொகு]