ஆர்மீனிய இனப்படுகொலையின் நூற்றாண்டு நிகழ்வு நினைவு கூறப்படுகிறது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 24, 2015

முதலாம் உலகப்போரின் முடிவில் 1915-16ஆம் ஆண்டும் ஒட்டாமான் பேரரசு ஒரு மில்லியனுக்கும் மேலான ஆர்மீனியர்களை இனப்படுகொலை செய்ததை ஆர்மீனியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் 24 அன்று நினைவு கூறுகிறார்கள்.


இந்த இனப்படுகொலையை ருசியா பிரான்சு போன்ற நாடுகள் ஒத்துக்கொண்டு இவ்வாண்டு நினைவு கூறல் நிகழ்ச்சியில் ருசிய அதிபர் புடினும் பிரான்சு அதிபர் ஆலண்டேவும் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்கா சார்பாக கருவூல செயலரும், ஐக்கிய இராச்சியம் சார்பாக ஆர்மீனியாவுக்கான அ அனைத்து கட்சியின் அவைத்தலைவரும் கலந்து கொள்கிறார்கள்.


துருக்கி நாடே சுருக்கப்பட்ட ஒட்டாமான் பேரரசின் தற்போதைய வடிவமாகும். ஒட்டாமான் பேரரசை ஆண்டவர்கள் துருக்கியர்கள்.


செருமனி 1920ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஒட்டாமான் பேரரசு ஒரு நாட்டு மக்களை கொன்றதை ஓர் ஆவணத்தில் விவரித்துள்ளது. ஆர்மீனியர்கள் கிறுத்துவ சமயத்தை கடைபிடித்தவர்கள். ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டது இனப்படுகொலை என செருமனியின் அதிபர் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


துருக்கி இனப்படுகொலை நடக்கவில்லை என்றும் போரின் காரணமா பலர் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிவிக்கிறது. இசுரேல், ஐக்கிய இராச்சியம், ஐக்கிய அமெரிக்கா ஆகியனவும் இனப்படுகொலை நடந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.


கத்தோலிக கிறுத்துவர்களின் தலைமையகமான வாட்டிகன் இனப்படுகொலை நடந்தது என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. தற்போதைய திருத்தந்தை பிரான்சிசு கூறியது அவரது தனிக்கருத்து என்று தெரிவிக்கப்பட்டது.


மூலம்[தொகு]