உள்ளடக்கத்துக்குச் செல்

சூரியனின் தாக்கத்தாலேயே செவ்வாய் தனது வளிமண்டலத்தை இழந்தது, புதிய ஆய்வுகள்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 6, 2015

செவ்வாய்க் கோள் எவ்வாறு தனது வளி மண்டலத்தின் பெரும் பகுதியை இழந்தது என்ற கேள்விக்கு அறிவியலாளர்கள் பதிலைக் கண்டுபிடித்துள்ளனர்.


செவ்வாயைச் சுற்றிவரும் நாசா நிறுவனத்தின் மாவென் விண்கலம் அனுப்பிய முதற்கட்டத் தகவல்கள் இப்போது வெளிவந்துள்ளன. செவ்வாயின் வளிமண்டலத்தின் உயர் வலயப் பகுதி சூரியனுடனான தாக்கத்தால் தனது பெரும் பகுதியை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இன்றைய செவ்வாயின் வளி அழுத்தம் புவியினுடையதை விட 1% இற்கும் குறைவாகக் காணப்படுகிறது. இதனால் வளியில் காணப்படும் சுயாதீன நீர் மூலக்கூறுகள் உடனடியாகவே ஆவியாக அல்லது உறைந்து விடுகின்றன. சில வளி மூலக்கூறுகள் தரையில் உள்ள கனிமங்களுடன் தாக்கமடைந்து விடுகின்றன.


ஆனாலும், மாவென் விண்கலத்தின் ஆய்வுகளின் படி, சூரியனின் தாக்கத்தால், செவ்வாய்க் கோளின் சூடான, ஈரத்தன்மையான பகுதிகள் குளிர்ந்த, உலர்ந்த பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.


அமெரிக்காவின் மாவென் விண்கலம் 2013 நவம்பர் 18 இல் செவ்வாயை நோக்கி ஏவப்பட்டது. 2014 செப்டம்பரில் செவ்வாயின் சுற்றுப் பாதையை அடைந்தது.


மூலம்

[தொகு]