செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்தெம்பர் 22, 2016

புதன் கிழமை இரவு கூட்டப்பட்ட சிறப்பு கருநாடக மாநில அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி செப்டம்பர் 23 வரை காவிரியில் நீர் விடப்போதில்லை என கருநாடகா அறிவித்துள்ளது. காவிரி தொடர்பாக விவாதிக்க சட்டமன்றம் விரைவில் கூட்டப்பட உள்ளது.


இதன் மூலம் கருநாடகா உச்ச நீதிமன்றத்துடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 21 இலிருந்து 27 வரை 6,000 கன அடி நீரை திறந்துவிட ஆணையிட்டிருந்தது.


அனைத்து கட்சியினரின் வழிகாட்டுதல் படி அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கட்டதாக முதலமைச்சர் சித்தராமையா கூறினார். ஆனால் மாநில அரசு மீது பாசக நம்பிக்கையிழந்துவிட்டதாக கூறி பாசக அனைத்து கட்சி கூட்டத்தை புறக்கணித்தது. அமைச்சரவை முடிவை பாசக வரவேற்றுள்ளது.


அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர்கள் கருநாடகத்தின் நான்கு அணைகளில் 28 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே உள்ளதாகவும் அதிலுள்ள 27 ஆயிரம் கன அடி நீர் மே 2017 வரை கருநாடகாவின் குடிநீர் தேவைக்கு மட்டுமே ஆகும் என கூறினர்.



மூலம்[தொகு]