சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்
Appearance
சவுதி அரேபியாவில் இருந்து ஏனைய செய்திகள்
- 27 பெப்பிரவரி 2018: இராணுவத்தில் பெண்களை சேர்க செளதி அரேபியா அரசு முடிவு
- 2 சனவரி 2018: சௌதி அரேபியாவும் அமீரகமும் மதிப்பு கூட்டல் வரியை கொண்டுவந்தன
- 19 அக்டோபர் 2016: சௌதி இளவரசர் கொலை குற்றத்துக்காக அரசால் கொல்லப்பட்டார்
- 23 ஏப்பிரல் 2015: சௌதி அரேபியா ஏமனில் மீண்டும் வான் தாக்குதலை தொடங்கியது
- 22 ஏப்பிரல் 2014: சவூதியில் 2003 தாக்குதலில் ஈடுபட்ட ஐவருக்கு மரணதண்டனை தீர்ப்பு
சவுதி அரேபியாவின் அமைவிடம்
புதன், அக்டோபர் 19, 2016
இளவரசர் துருகி பின் சௌட் அல்-கபிர் செய்த கொலை குற்றத்துக்காக அவருக்கு செவ்வாய் கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது. சௌதி அரேபியாவில் 134 நபராக மரணதண்டனைக்கு ஆளானவர் இளவரசர் அல்-கபிர்.
அரச குடும்பத்தவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படுவது அரிதாகும். 1975ஆம் ஆண்டு இளவரசர் பைசல் பின் முசையது அல் சௌத் தன் பெரியப்பா அரசர் பைசலை கொன்றதுக்காக நிறைவேற்றப்பட்டது தான் அரச குடும்பத்தினர் கடைசியாக பெற்ற மரணதண்டனையாகும்.
இளவரசர் அல்-கபிர் தன்னுடைய உதவியாளரை சுட்டதை ஒப்புக்கொண்டார் என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இவருக்கு எப்படி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என அமைச்சகம் தெரிவிக்கவில்லை. ஆனால் வாளால் தலையை வெட்டி மரணதண்டனை நிறைவேற்றப்படுவது தான் சௌதி அரேபியாவின் வழக்கம்.
மூலம்
[தொகு]- Saudi prince executed for murdering a compatriot பிபிசி 19 அக்டோபர் 2016
- Saudi Arabia executes prince Turki bin Saud al-Kabir for murder டிஎன்ஏ இந்தியா 19 அக்டோபர் 2016
- Saudi Interior Ministry: Death Sentence carried out against Prince Turki bin Saud Al-Kabeer அசாரக்கு அல்-அவசாட் 19 அக்டோபர் 2016