உள்ளடக்கத்துக்குச் செல்

குர்து இன ஆதரவு கட்சி தலைவர்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் துருக்கி கைது செய்தது.

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், நவம்பர் 4, 2024

செலாகாத்தின் டெமிர்டாசு
யபீசின் யுக்சேடாக்

வெள்ளிக்கிழமை துருக்கியின் தென்கிழக்கு பகுதியிலுள்ள பெரிய நகரமான டியர்பாகிர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 8 பேர் பலியாயினர் 100இக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதற்கு தடை செய்யப்பட்ட குர்திசுத்தான் உழைப்பாளர்கள் கட்சி தான் காரணம் என துருக்கி கருதுகிறது.


குர்திசுத்தான் இன மக்களுக்கு ஆதரவானதானதாக மக்கள் சனநாயக் கட்சி (HDP) பார்க்கப்படுகிறது. மக்கள் சனநாயக் கட்சியின் (HDP) இரு தலைவர்களை (செலாகாத்தின், பீசன்) தீவிரவாதத்த பரப்புரைக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க ஒத்துழைக்க மறுத்தனர் என துருக்கி கைது செய்தது. இவர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆவர். மேலும் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்தது. மொத்தம் 13 நபர்களுக்கு எதிராக கைது ஆணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் இருவர் வெளிநாட்டில் இருப்பதால் அவர்கள் கைதாகவில்லை என துருக்கியின் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.


மக்கள் சனநாயக் கட்சி துருக்கியின் மூன்றாவது பெரிய கட்சியாகும் இதற்கு 550 உறுப்பினர்கள் உடைய துருக்கி நாடாளுமன்றத்தில் 59 உறுப்பினர்கள் உள்ளனர். காவல்துறை அங்காராவிலுள்ள கட்சியின் தலையகத்தையும் சோதனை செய்தது. துருக்கியின் செயலை ஐரோப்பிய நாடாளுமன்றம் கண்டித்துள்ளது.


துருக்கியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டவிலக்களிக்கப்பட்டவர்கள். அவர்களை கைது செய்ய முடியாது. ஆனால் இவ்வாண்டு மே மாதம் மக்கள் சனநாயக் கட்சி உறுப்பினர்களுக்கும் மேலும் சில உறுப்பினர்குக்கும் இச்சலுகை நீக்கப்பட்டது.


முகநூல், யூடியுப், என்னாப்பு போன்ற சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டன. மேலும் இவ்வெடிகுண்டு தாக்குதல் பற்றிய செய்திகளும் இணைய வெளியில் தடை செய்யப்பட்டுள்ளன.


மூலம்

[தொகு]