மலேசியாவில் பேருந்து விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
ஞாயிறு, திசம்பர் 27, 2009
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவின் 'மெக்கறி' உணவகம் பெயரை மாற்ற வேண்டியதில்லை எனத் தீர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசியாவில் இந்தியர்கள் வசிக்கும் கம்போங் புவா பாலா கிராம வீடுகள் தகர்ப்பு
- 9 ஏப்பிரல் 2015: மலேசிய இந்துராப் உறுப்பினர் மனோகரன் காவல்துறை மீது அவதூறு வழக்கு
- 20 சூலை 2014: மலேசிய விமான விபத்து: 296 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன
- 18 சூலை 2014: மலேசிய விமானம் உக்ரைன் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்டது, 298 பேர் உயிரிழப்பு
மலேசியாவில் வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் 278.8 கிமீ தொலைவில் பெராக் மாநிலத்தில் ஈப்போ சிலாத்தான் அருகே சானி எக்ஸ்பிரஸ் (Sani Express) இரட்டைத்தட்டு பேருந்து ஒன்று தடம் மாறி சாலையில் உள்ள பாதுகாப்பு பிரிவு சுவரை உடைத்து கொண்டு தடம் புரண்டு கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்தனர்.
சனியன்று அதிகாலை 1 மணியளவில் நடந்த இந்த விபத்தில் மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழ்ந்தவர்கள் அனைவரும் பேருந்தின் கீழ்த்தட்டில் பயணித்தவர்கள் என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். பேருந்தின் சாரதியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விபத்துக்கு சற்று முன்னர் தான் சற்று நேரம் உறங்கியதாக சாரதி காவல்துறையினரிடம் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் பெராக்கில் இரண்டு சாலை விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. 2007 ஆம் ஆண்டில் பேருந்து விபத்து ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்டனர். நாட்டில் நிகழ்ந்த மிகவும் மோசமான சாலை விபத்தாக அப்போது இது சொல்லப்பட்டது.
மூலம்
[தொகு]- 10 killed in bus crash; Perak MB wants night express buses stopped, த மலேசியன் ஸ்டார், டிசம்பர் 26, 2009
- 10 killed in Malaysia bus crash: police ஏபி, டிசம்பர் 26, 2009
- Bus Driver Admits To Falling Asleep Before Crash, பெர்னாமா, டிசம்பர் 26, 2009