உள்ளடக்கத்துக்குச் செல்

'உலகின் மிகக் குறைந்த விலை' வீடுகளை அமைக்க டாட்டா நிறுவனம் திட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 16, 2011

ஒரு வாரத்துக்குள் மிகக் குறைந்த விலையுள்ள வீடுகளை அமைக்க இந்தியாவின் டாட்டா நிறுவனம் முன்வந்துள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


2009 ஆம் ஆண்டில் உலகின் விலை குறைந்த டாட்டா நேனோ என்ற தானுந்துகளைத் தயாரித்த டாட்டா நிறுவனம் தற்போது இந்தியாவின் வீடற்ற வறிய மக்களுக்காக இந்த விலை குறைந்த வீடுகள் அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. கிராமப் பக்கங்களில் பல மில்லையன் எண்ணிக்கையில் வீடுகள் தேவைப்படுகின்றன.


அடுத்த ஆண்டு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆயத்தங்கள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் குறித்து மாநில அரசுகளுடன் இந்நிறுவனம் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளது


"ஏழு நட்களுக்குள் ஒரு வீடு கட்டப்பட முடியும். 20 சதுர கிமீ பரப்பளவு கொண்ட இவ்வீட்டை அமைப்பதற்கான செலவு கிட்டத்தட்ட 32,000 இந்திய ரூபாய்கள் ஆகும்," என டாட்டா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவர் சுமித்தேஷ் தாஸ் தெரிவித்தார்.


இவற்றைவிட கூடிய வசதிகளுடன், விலை அதிகமான வீடுகளை அமைக்கவும் எம்மிடம் திட்டங்கள் உண்டு என அவர் கூறினார்.


”மாநில அரசுகளுடனும், கிராம ஆட்சியாளர்களிடமும் பேசி வருகிறோம். ஆனாலும் திட்டம் இப்போது ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. கட்டடப் பொருட்கள் தங்கு தடையின்றிக் கிடைப்பது முதலில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்," என்றார் சுமித்தேஷ் தாஸ்.


மூலம்

[தொகு]