உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டார்க்டிக்காவில் நடைப்பயணம் மேற்கொண்டு உலக சாதனை நிகழ்த்த சர் ரானுல்ஃப் பைன்சு திட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து
அண்டார்க்டிக்காவில் இருந்து ஏனைய செய்திகள்
அண்டார்க்டிக்காவின் அமைவிடம்

அண்டார்க்டிக்காவின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

திங்கள், செப்டெம்பர் 17, 2012

பிரித்தானியாவின் பிரபல தேடலாய்வாளர் சர் ரானுல் பைன்சு தேற்குக் குளிர் காலத்தில் அண்டார்க்டிக்காவுக்குக் குறுக்கே நடைப்பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.


சேர் ரானுல்ஃப் பைன்சு

-90செ வெப்பநிலையில் மிகக் குளிரான காலநிலை நிலவும் இப்பகுதியில் தனது ஆறு மாத நடைப்பயணத்தை அடுத்த ஆண்டு இவர் தொடங்கவிருக்கிறார்.


68 அகவையுள்ள சர் ரானுல்பிற்கு இது ஒரு அடுத்த கட்ட உலக சாதனையாக இருக்கும். எற்கனவே பல உலக சாதனைகளை நிகழ்த்தி கின்னசு புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். உயிருடன் இருக்கும் தேடலாய்வாளர்களில் இவர் புகழ் படைத்தவர் என கின்னசு குறிப்பிட்டுள்ளது.


அண்டார்க்டிக்காவின் பசிபிக் கரைக்குக் கப்பல் மூலம் செல்லும் இவரது குழுவினர் 2013 மார்ச்சு 21 இல் சம இரவு-நாள் வரும் வரை காத்திருந்து தமது நடைப்பயணத்தைத் தொடங்கவிருக்கின்றனர்.


சுமார் நூறாண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில், தெற்குக் குளிர்காலத்தில் தனது நடைப்பயணத்தைத் தொடங்கிய காப்டன் ஸ்கொட் என்பவர் பயணத்தை முடிக்காமலேயே இறந்து போனார்.


மூலம்

[தொகு]