அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களில் பலத்த சூறாவளி, 37 பேர் உயிரிழப்பு
- 15 பெப்பிரவரி 2018: அமெரிக்காவிலுள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் பலி
- 8 பெப்பிரவரி 2018: இசுபேசு எக்சு விண்கலம் தெல்சா காரை விண்ணுக்கு செலுத்தியது
- 20 சனவரி 2018: வரவு செலவு திட்டம் மேலவையில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவில் அரசுப் பணிகள் நிறுத்தம்
- 2 சனவரி 2018: அமெரிக்க அதிபர் தன் 2018 ஆண்டுக்கான முதல் கீச்சில் பாகித்தானை தாக்கியுள்ளார்
- 7 திசம்பர் 2017: இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது
ஞாயிறு, மார்ச்சு 4, 2012
ஐக்கிய அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக வீசிய பலத்த சூறாவளியில் சிக்கி குறைந்தது 37 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பலரைக் காணவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் மத்திய மேற்கு மாநிலங்களான அலபாமா, ஜியார்ஜியா, கென்டக்கி, இன்டியானா, ஒகையோ ஆகியவற்றில் வீசிய கடும் சூறாவளி காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மின்சாரம், மற்றும் தொலைத்தொடர்பு ஆகியன துண்டிக்கப்பட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் 90 சூறாவளிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
சூறாவளிகள் தாக்குவது அமெரிக்காவில் ஆண்டு முழுவதும் நடக்கும் நிகழ்ச்சியாகும். ஆனாலும், இக்காலப்பகுதியில் இவ்வாறான கடுமையான சூறாவளி நிகழ்வது அபூர்வம் எனக் கூறப்படுகிறது. வழக்கமாக மார்ச்சு முதல் மே மாதம் வரை தென் பகுதியில் அதிகமாகவும், அதன் பின்னர் வடக்கே சூறாவளிகள் வீசும். கடந்த ஆண்டு மட்டும் 500 பேர் வரையில் சூறாவளியின் தாக்கத்தினால் கொல்லப்பட்டனர்.
மூலம்
[தொகு]- ஸ்டீவன் யச்சீனோ "Towns Search for Survivors After Widespread Storms". நியூயார்க் டைம்ஸ், மார்ச் 3, 2012
- "Tornadoes slam Midwest, at least six dead in Indiana". சிக்காகோ ட்ரிபியூன், மார்ச் 2, 2012
- "Clear-up after tornadoes wreak havoc across US Midwest". பிபிசி, மார்ச் 3, 2012