இசுரேலின் தலைநகராமாக ஒன்றுபட்ட செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், திசம்பர் 7, 2017

செருசலேம் மீது இசுரேலின் இறையாண்மை சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதுவரை அனைத்து நாடுகளும் டெல் அவிவ் நகரில்தான் தங்கள் தூதரகங்களை பராமரிக்கின்றன. யூத, இசுலாம் மற்றும் கிறித்துவம் ஆகிய மூன்று முக்கிய மதநம்பிக்கைகளுக்கும் நெருக்கமான புனித தளங்கள் செருசலேம் நகரில் அமைந்துள்ளது.

கிழக்கு செருசலம் -பொன்னிறத்தில் தெரியும் கோபுரம் பாறைக் குவிமாடம்


அமெரிக்க அதிபர் டொனல்ட் திரம்பு இசுரேலின் தலைநகராமாக செருசலத்தை அமெரிக்கா ஏற்றுக்கொண்டதாக டிசம்பர் 6, 2017இல் அறிவித்தார். தான் தேர்தல் வாக்குறிதியில் இதை கூறியிருந்ததாகவும் இப்போது அதை நிறைவேற்றி உள்ளதாகவும் கூறினார். அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டும் இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையே அமைதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டொனல்ட் திரம்பு

அமெரிக்காவின் முடிவுக்கு சௌதி அரேபியா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அந்நாட்டுகளின் அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பு "நியாயமற்ற மற்றும் பொறுப்பற்ற" செயல் என்று தெரிவித்துள்ளது.


தற்போது டெல் அவிவ் நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரம் செருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் டொனல்ட் திரம்பு அறிவித்தார். அதற்கான நடவடிக்கைகளை தொடங்குமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.


அதே நேரத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி ஏற்படுத்தவும், நிரந்தர தீர்வுக்கும் வழிகாட்டுவதற்கும் இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என டொனல்ட் திரம்பு நம்பிக்கை தெரிவித்தார்.



பழைய நகரை உள்ளடக்கிய கிழக்கு செருசலேத்தை , 1967 ஆம் ஆண்டில் நடந்த 6 நாள் போர் முடிந்த பின்னர் இசுரேல் இணைத்தது. ஆனால், இது சர்வதேச அளவில் இஸ்ரேலின் பகுதியாக ஏற்கப்படவில்லை.


டொனல்ட் திரம்பின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று கூறினார், மேலும் இசுரேல் அதிபர் டொனல்ட் திரம்பிர்க்கு மிகவும் நன்றியுடையதாக இருக்கும் என்று மேலும் தெரிவித்தார்.


இதனிடையே, பாலத்தீன தலைவர் அப்பாசு தனது முன் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி உரையில் செருசலேம்தான் பாலத்தீன அரசின் என்றென்றும் நீடித்து நிலைக்கும் தலைநகர் என்று குறிப்பிட்டுள்ளார்.


முன்னதாக 2017 ஏப்பிரல் மாதம் உருசியா மேற்கு செருசேலத்தை இசுரேலின் தலைநகராமாக ஏற்றுக்கொண்டிருந்தது.

மூலம்[தொகு]

[[பகுப்பு: இஸ்ரேல்]