அலைக்கற்றை ஊழல்: கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு அழைப்பாணை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 4, 2011

இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி) ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக மத்திய அமலாக்கத்துறை ராஜ்ய சபா உறுப்பினரும், தமிழக முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி உட்பட ஐந்து பெருக்கு அழைப்பாணை அனுப்பி உள்ளது.


சில நாட்களுக்கு முன்னர் இரண்டாவது குற்றப்பத்திரிக்கையை, மத்திய புலனாய்வுத்துறை இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல் தொடர்பாக விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில் கலைஞர் தொலைக்காட்சிக்கு, டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான சினியுக் நிறுவனம் கொடுக்க வந்த சுமார் 214 கோடி ரூபாய்கள் பணம், இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாக டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கு ஒதுக்கியதற்கு ஈடாக கொடுக்கப்பட இருந்த லஞ்சப்பணம் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பாக மே 6 ஆம் நாள் தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழிக்குப் பதிலாக அவரது மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி சமூகமளிக்கலாம் என்று தெரிகிறது. இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்துள்ளது.


மேலும், கலைஞர் தொலைக்காட்சியை பின்னால் இருந்து இயக்குவதே கனிமொழிதான் என்றும், கனிமொழிக்கும், முன்னாள் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும், அலுவல் ரீதியாக நட்பு இருந்தது என்றும் தெரிவித்து இருந்தது சிபிஐ.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]