உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப் பிரதேசத்தில் தொடருந்து தீப்பற்றியதில் 23 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 28, 2013

தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தொடருந்து ஒன்று திடீரெனத் தீப்பிடித்ததில் இரு சிறுவர்கள் உட்படக் குறைந்தது 23 பேர் கொல்லப்பட்டனர்.


மகாராட்டிராவின் நான்டெட் நகரில் இருந்து பெங்களூருக்குச் சென்று கொண்டிருந்த விரைவுத் தொடருந்தின் குளிரூட்டப்பட்ட பெட்டி ஒன்றே இன்று அதிகாலை 3:30 மணியளவில் தீப்பிடித்தது. இப்பெட்டியில் சுமார் 60 பேர் வரை பயணம் செய்து கொண்டிருந்தனர்.


விபத்துக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் தமிழ்நாட்டில் இருந்து சென்ற விரைவுத் தொடருந்து ஒன்று ஆந்திரப் பிரதேசத்தில் தீப்பற்றியதில் 47 பேர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]