இந்தியாவில் வெப்ப தாக்கத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1500க்கும் அதிகமாகியுள்ளது

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 28, 2015

வெப்பத்தாக்கத்தால் இந்தியாவில் அதக உயிரிழப்பு என்று சொன்னாலும் ஆந்திரப் பிரதேசம் & தெலுங்கானா மாநிலங்களிலேயே அதிக இறப்புகள் நேர்ந்துள்ளன. ஆந்திரப் பிரதேசத்திலும் தெலுங்கானாவிலும் புதன்கிழமைக்கு பின் 414 பேர் இறந்துள்ளார்கள். ஆந்திரப் பிரதேசத்தில் 1000க்கும் அதிகமானவர்கள் இதனால் இறந்துள்ளார்கள். தெலுங்கானாவில் 300க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளார்கள்


இதுவரை ஒடிசாவில் 43 பேரும் குசராத்தில் ஏழு பேரும் தில்லியில் இருவரும் உயிரிழந்துள்ளார்கள்.


கடும் வெப்ப தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என ஐதரபாத்து வானிலை ஆய்வாளர் கூறியுள்ளார். ஆந்திரப் பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்திலேயே அதிகமக்கள் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக குண்டூர், விசாகப்பட்டணம், விசயநகரம், நெல்லூர் , கிருஷ்ணா, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அதிகபேர் இறந்துள்ளார்கள். மற்ற மாவட்டங்களிலும் வெப்பத்தால் மக்கள் இறந்துள்ளார்கள்


தெலுங்கானாவில் நலகொண்டா மாவட்டத்திலேயே அதிகமக்கள் வெப்பத்தால் உயிரிழந்துள்ளனர். அதற்கடுத்தபடியாக கம்மம், கரீம் நகர், மெகபூப் நகர் மாவட்டங்களில் அதிகபேர் இறந்துள்ளார்கள். மற்ற மாவட்டங்களிலும் வெப்பத்தால் மக்கள் இறந்துள்ளார்கள்


முதியவர்களும், தொழிலாளர்களுமே அதிக அளவில் இறந்துள்ளார்கள்.


இற்றை

1800க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக புதிய செய்திகள் கூறுகின்றன. உத்திரப் பிரதேசம், பஞ்சாப், அரியானா, இமாச்சலப் பிரதேசம், சார்கண்ட், இராசசுத்தான் போன்ற மாநிலங்களிலும் வழக்கத்துக்கு அதிகமான வெப்பத்தாக்கம் இப்போது நிலவுகிறது.

ஆந்திரப் பிரதேசம்(மஞ்சள் நிறம்) தெலுங்கானா(வெள்ளை நிறம்)


மூலம்[தொகு]