ஆந்திராவில் மூன்று மாவட்டங்களில் திடீர் நிலநடுக்கம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, ஜனவரி 28, 2012

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் நேற்று முன்தினம் மதியம் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் அச்சமடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினார்கள்.


12.25 மணியளவில் ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள நந்திகாமா, கஞ்சகச்சர்லா, குண்டூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி, கோசூ மற்றும் கம்மம் மாவட்டத்தில் மதிரா ஆகிய பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.


சிறிய இடைவெளியில் 5 முறை நில அதிர்வு ஏற்பட்டது. ஆனால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்து ஐதராபாத்தில் உள்ள தேசிய புவியியல் ஆராய்ச்சி மையத்தின் அறிவியலாளர் சத்தா கூறுகையில், "2.8 ரிக்டர் புள்ளிக்கும் குறைவாக நிலநடுக்கம் ஏற்பட்டதால், ரிக்டர் அளவு கோலில் இந்த நிலநடுக்கம் பதிவாகவில்லை," என்றார்.


மூலம்[தொகு]

  1. மூன்று மாவட்ட மக்கள் பீதி ஆந்திராவில் திடீர் நிலநடுக்கம், தினகரன்
  2. ஆந்திரப் பிரதேசத்தில் நிலநடுக்கம், சென்னை ஆன்லைன், சனவரி 27, 2012
Bookmark-new.svg