இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' திரைப்படப் பாடலுக்காக விருது
- 25 பெப்பிரவரி 2018: நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணமடைந்தார்
- 6 நவம்பர் 2015: யேல் ஃபெல்லோ விருதை இந்தியத் திரைப்பட நடிகை நந்திதா தாஸ் பெற்றார்
- 6 நவம்பர் 2015: '''பரதேசி''' என்ற தமிழ் திரைப்படம் நான்கு விருதுகளை பெற்றுள்ளது.
- 23 திசம்பர் 2014: பழம்பெரும் இயக்குனர் கைலாசம் பாலசந்தர் காலமானார்
- 7 சூன் 2014: ரமணா திரைப்படத்தில் வரும் கதாபாத்திர பேராசிரியர் பணி ஓய்வு - கண் கலங்கிய மாணவர்கள்
செவ்வாய், அக்டோபர் 25, 2011
பெல்ஜியத்தில் நடந்த உலக சவுண்ட் டிராக் அகாடமி விருதுகள் 2011 நிகழ்ச்சியில் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானுக்கு '127 அவர்ஸ்' படத்தில் இடம்பெற்ற 'இஃப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக 'ப்பளிக் சாய்ஸ்' (பொதுத் தெரிவு) விருது கிடைத்துள்ளது.
கடந்த 2009-ம் ஆண்டு 'ஸ்லம்டாக் மில்லினர்' என்ற படத்துக்கு இசை அமைத்ததற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளை வென்றார். ஸ்லம்டாக் மில்லினர் படத்தை இயக்கிய அதே டேனி பாய்லின் புதிய படம் தான் இந்த '127 அவர்ஸ்' (127 hours).
இந்த ஹாலிவுட் படத்தில் இடம் பெறும் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக சிறப்பான முறையில் இசையமைத்தமைக்காக ஏ. ஆர். ரகுமானின் பெயர் மீண்டும் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இவ்வாண்டு அவருக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை. இந்நிலையில் பெல்ஜியம் நாட்டில் உலக சவுண்டு டிராக் அகாடமி விருதுகள் நிகழ்ச்சியில் 127 அவர்ஸ் படத்தில் சிறப்பாக இசையமைத்தற்காக 'பப்ளிக் சாய்ஸ்' விருது வழங்கப்பட்டது. 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக ஏ. ஆர். ரகுமானுக்கு விமர்சகர்கள் விருதும் ஆண்டின் ஆரம்பத்தில் கிடைத்திருந்தது.
'எனக்கு பப்ளிக் சாய்ஸ் விருது கிடைத்ததற்காக எனது ரசிகர்கள் மற்றும் உலக சவுண்டு டிராக் அகாடமிக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று ஏ. ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார்.
தொடர்புள்ள செய்திகள்
[தொகு]- ஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள், பெப்ரவரி 1, 2010
மூலம்
[தொகு]- Rahman wins award for '127 Hours', ஐபிஎன் லைவ், அக்டோபர் 24, 2011
- AR Rahman wins award for 127 Hours, இந்துஸ்தான் டைம், அக்டோபர் 24, 2011
- Rahman wins award for '127 Hours', டெக்கன் ஹெரல்ட், அக்டோபர் 24, 2011
- 127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு 'பப்ளிக் சாய்ஸ்' விருது, தட்ஸ் தமிழ், அக்டோபர் 24, 2011