இணையதளங்களுக்கு தணிக்கை இல்லை, இந்திய மத்திய அரசு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, திசம்பர் 16, 2011

"சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் தகவல்களை அரசு தணிக்கை செய்யாது," என இந்திய அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்திய மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல்

சமூக வலைத் தளங்கள் மற்றும் இணையதளங்களில் வெளியாகும் சில தகவல்கள், மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளதாகவும், இதுபோன்ற தகவல்களை வெளியிடுவதை தவிர்க்காவிட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்திருந்தார்.


இதற்குக் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், கூகிள், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களின் நிர்வாகிகளுடன், அமைச்சர் கபில் சிபல், பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்கினார். இதன்பின், அவர் தெரிவித்ததாவது: "சமூக வலைத் தளங்களால், நாட்டுக்கும், குடிமக்களுக்கும், எந்த வகையில் பலன் கிடைக்கும் என்பது பற்றி, சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. வலைத்தள நிர்வாகிகள் மட்டுமல்லாமல், வெளியுறவு அமைச்சகம், தகவல் தொடர்பு அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகளிடமும், இது தொடர்பாக கருத்து கேட்கும் நடவடிக்கை துவங்கியுள்ளது," என்று அவர் தனது செய்திக் குறிப்பில் தெறிவித்தார்.


மூலம்[தொகு]