இந்தியத் துடுப்பாட்ட வீரர் சச்சினுக்கு பாரத ரத்னா விருது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், பெப்பிரவரி 4, 2014

துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு, இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது இன்று வழங்கப்பட்டது.


சச்சின் டெண்டுல்கர்

இராஷ்ட்ரபதி பவனில் நடந்த ஒரு விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நடுவண் அமைச்சர்கள், சச்சினின் குடும்பத்தினர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.


சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருதைப் பெறும் முதல் இந்திய விளையாட்டு வீரரும், மற்றும் இவ்விருதைப் பெறும் முதலாவது இளம் விருதாளரும் ஆவார்.


மூலம்[தொகு]