உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் அரிதுவாரில் நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 8, 2011

வடக்கு இந்தியாவின் உத்தராகண்ட மாநிலத்தில் உள்ள புனித நகரான அரிதுவாரில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி குறைந்தது 16 பேர் உயிரிழந்தனர். ஐம்பதிற்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.


காயத்திரி பரிவார் என்ற இந்துப் பிரிவை ஆரம்பித்த குரு பண்டித் சிறீராம் சர்மாவின் 100வது பிறந்த நாளை ஒட்டி இடம்பெற்ற மத வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை நதியில் நீராடினார்கள். இதன் போதே பெரும் நெரிசல் ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் எனக் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். "சமயச் சடங்குகள் நடைபெற்றபோது, பலர் முண்டியடித்துக் கொண்டு தமது காணிக்கைகளை எரியும் தீயில் இடுவதற்காக பலர் முண்டியடித்துக் கொண்டு முன்னே சென்றனர். இதனால் குட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை," என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஒருவர் தெரிவித்தார்.


நெரிசலில் பலர் கீழே வீழ்ந்தனர், அவர்களையும் தாண்டியபடி பலர் முன்னே செல்லத் தொடங்கினர் எனக் கூறப்படுகிறது.


தலைநகர் தில்லியில் இருந்து 173 கிமீ தொலைவில் உள்ள அரிதுவார் பல இந்துக் கோயில்களைக் கொண்டுள்ளது. இமய மலையில் இருந்து கங்கை நதி இங்கு பாய்வதால் இந்துக்கள் இதனை முக்கியத் தலமாகக் கருதுகின்றனர்.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]