இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 27, 2014

இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி நேற்று பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.


புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் நேற்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும் இரகசிய காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.


புதிய அமைச்சரவையில் உள்ள 45 பேரில், நரேந்திர மோடி உள்பட 24 பேர் ஒன்றிய ஆய அமைச்சர்களாவர். 10 பேர் தனிப் பொறுப்புகளுடன் கூடிய இணையமைச்சர்கள்; 11 பேர் இணையமைச்சர்களாவர்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

இந்தியப் பொதுத் தேர்தல் 2014: ஆட்சியமைக்கத் தேவையான இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றது, மே 17, 2014மூலம்[தொகு]