இந்தியாவின் முதலாவது பாதுகாப்புச் செயற்கைக் கோள் விண்ணுக்கு ஏவப்பட்டது

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஆகத்து 30, 2013

இராணுவத் தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்காக தனது முதலாவது செயற்கைக் கோளை இந்தியா இன்று அதிகாலையில் விண்ணுக்கு ஏவியுள்ளது.


ஜிசாட்-7 (GSAT-7) என அழைக்கப்படும் இந்த தகவல்-செயற்கைக்கோளை இந்திய வான் ஆய்வு மையம் (இஸ்ரோ) பிரெஞ்சு கினியில் அமைந்துள்ள கோரோ வான்தளத்தில் இருந்து ஏவியது. செயற்கைக்கோள் ஏவப்படும் காட்சி இந்தியத் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.


அடுத்த வாரத்தில் இச்செயற்கைக் கோள் சுற்றுப்பாதை ஒன்றில் வைக்கப்படும் என இசுரோ தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றத்தையும், உளவுத் திறனையும் இச்செயற்கைக்கோள் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


"பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புகளுக்கு" இச்செயற்கைக் கோள் முக்கியப் பங்காற்றும் என இசுரோ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இந்தியா பல-பில்லியன் டாலர் செலவில் தொலைத் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணிற்கு ஏவியுள்ளது. அதே வேளையில், செவ்வாய்க் கோளுக்கு ஆளில்லா விண்கலம் ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டு வருகின்றது.


மூலம்[தொகு]