இந்தியாவிலுள்ள 32 சட்டசபைகளுக்கும் 3 மக்களவைகளுக்கும் ஆன இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், செப்டெம்பர் 16, 2014

இந்தியாவில் நடத்த 32 சட்டசபைக்கும் 3 மக்களவைக்கும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின


2014, செப்டம்பர் 13 அன்று நடந்த இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கையும் முடிவும் செப்டம்பர் 16 அன்று வெளியானது.


இதில் 3 மக்களவை தொகுதிகளிலும் பாசக, சமாச்வாடி கட்சி, தெலுங்கானா ராசுட்டிர சமிதி ஆகியவை வெற்றி பெற்றன. இவை பொதுத்தேர்தலின் போது ஏற்பட்ட முடிவின் படியே இருந்தன.


உத்திரப்பிரதேசத்தில் பாசக 3 தொகுதிகளிலும் சமாச்வாடி கட்சி 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. உத்திரப்பிரதேசத்தில் முன்பு பாசக வசம் இருந்த 9 தொகுதி அதன் கூட்டணி கட்சியான அப்னா தளத்திடம் இருந்த 1 தொகுதி என 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் அது தோற்றுள்ளது.


நொய்டா, லக்டோ (கிழக்கு), சகரன்பூர் நகர் என மூன்று தொகுதிகளில் மட்டும் வென்றுள்ளது.


ராசசுத்தானில் போட்டியிட்ட நான்கு இடங்களில் மூன்றை காங்கிரசும் ஒன்றை பாசகவும் பெற்றன.


அசாமில் நடந்த மூன்று தொகுதிகளில் காங்கிரசு, பாசக, அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னனி தலா ஒரு இடத்தை பெற்றன.


மேற்கு வங்கத்தில் நடந்த இரு தொகுதிகளுக்கான தேர்தலில் திரிணாமுல் காங்கிரசும், பாசகவும் தலா ஒரு இடத்தை பெற்றன. இங்கு வெற்றி பெற்றதன் மூலம் பாசக முதன்முறையாக மேற்குவங்க சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.


குசராத்தின் 9 சட்டசபைக்கு நடத்த தேர்தலில் 6 தொகுதிகளில் பாசகவும் 3 கொகுதிகளில் காங்கிரசும் வென்றன.


திரிபுராவின் ஒரு தொகுதியில் இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சியம்). ஆந்திரப்பிரதேசத்தின் ஒரு தொகுதியில் தெலுங்கு தேசமும், சிக்கிமின் ஒரு தொகுதியில் கட்சி சாரா வேட்பாளரும் வென்றனர்.


மூலம்[தொகு]