உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 2, 2010

இந்தியாவில் ஆறு முதல் பதினான்கு வயது வரையிலான அனைத்து சிறார்களுக்கும் இலவச ஆரம்பக் கல்வி கிடைப்பது உறுதி செய்யப்படுவதற்கான முக்கிய சட்டமொன்று நடைமுறைக்கு வந்துள்ளது.


சிறுவர்களுக்கான அடிப்படைக் கல்வி உரிமையை உறுதி செய்வதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.


தற்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 8 மில்லியன் சிறுவர்கள் பள்ளிகளுக்குச் செல்லுவதில்லை அல்லது பள்ளிப்படிப்பை இடை நிறுத்திய நிலையில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்க பிள்ளைகள் ஆவர்.


கல்வியறிவு பெறுவதற்கு பால் மற்றும் சமூக வேறுபாடு கவனிக்கப்பட மாட்டாது. அனைவருக்கும் அடிப்படைக் கல்வி வழங்கப்படும் என மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.


இந்தியாவுக்காக அண்மையில் மொத்தம் $1.05 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இரண்டு கல்வித் திட்டங்களை உலக வங்கி அறிவித்திருந்தது. இவற்றில் ஒன்று ஆரம்பப் பள்ளியில் சிறுவர்கள் இணையும் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது என்பதாகும்.


2003 ஆம் அண்டில் இருந்து 2009 வரை இத்தொகை 57 மில்லியன்களால் அதிகரித்திருந்ததாக உலக வங்கியின் அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலானோர் அரசுப் பள்ளிஅக்ளிலேயே இணைந்திருந்தனர்.


இதே காலப்பகுதியில் பள்ளிகளை இடைநிறுத்துவோரின் எண்ணிக்கை 25 மில்லியனில் இருந்து 8.1 மில்லியனுக்குக் குறைந்திருந்ததாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


இதே வேளையில், இந்தியாவில் இருக்கும் மக்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் அதிகமானோர் எழுத்தறிவில்லாதவர்கள் என்று ஐக்கிய நாடுகள் மதிப்பிட்டிருக்கின்றது. தற்போது அங்கு ஒவ்வொரு வட்டாரத்திலும் அரச பள்ளிக்கூடங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.


அத்துடன் தனியார் பள்ளிக்கூடங்களில் வறிய மாணவர்களுக்கு குறைந்தபட்சம் கால்வாசி இடமாவது ஒதுக்கப்பட வேண்டும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலம்

[தொகு]