இந்தியாவில் மலேரிய இறப்புகள் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 23, 2010

இந்தியாவில் மலேரியா நோயினால் இறப்போரின் எண்ணிக்கை மிக குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.


கொசுக்களினால் தொற்றும் மலேரியா நோய்

'த லான்செட்’ என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றின் படி, இந்தியாவில் மட்டும் மலேரியாவினால் இறப்போரின் எண்ணிக்கை ஆண்டொன்றுக்கு 125,000 முதல் 277,000 ஆவர். ஆனால் உலக சுகாதார அமைப்பு இவ்வெண்ணிக்கையை வெறும் 16,000 என்று மட்டுமே காட்டியுள்ளது.


உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட இந்தியாவில் மலேரியாவின் தாக்கத்தினால் கொல்லப்படுபவர்களின் எண்ணிக்கை மருத்துவமனைகளில் இறப்போரின் அதிகாரபூர்வத் தகவல்களின் அடிப்படையில் பெறப்பட்டவை ஆகும் என த லான்செட் செய்தி கூறுகிறது. ஆனாலும், பன்னாட்டு ஆய்வாளர்கள் எடுத்த கணிப்பின் படி, இவ்வேண்ணிக்கை மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கின்றது. கிராமப்பகுதிகளிலும், மிகவும் பிந்தங்கிய பகுதிகளிலும், மலேரியாவினால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளுக்கு செல்வதில்லை என்றும், போதிய மருத்துவ வசதி இன்றி தமது வீடுகளிலேயே இறக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.


‘த லான்செட்’ வெளியிட்டுள்ள அறிக்கையை உலக சுகாதார அமைப்பு மறுத்துள்ளது. தாம் வெளியிட்ட எண்ணிக்கை வீடு வீடாகச் சென்று எடுக்கப்பட்டது என்றும் அது கூறியுள்ளது.


மூலம்