இந்தியாவில் விக்கிப்பீடியாவின் பணிமனை திறக்கப்படும் என ஜிம்மி வேல்சு அறிவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, அக்டோபர் 31, 2010

விக்கிப்பீடியா கலைக்களஞ்சியத்தின் பணிமனை ஒன்று விரைவில் இந்தியாவில் திறக்கப்படும் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார்.


விக்கிமீடியா நிறுவனர் ஜிம்மி வேல்சு

இது ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது பணிமனையாக இருக்கும் என விக்கிமீடியா நிறுவனர்களில் ஒருவரான ஜிம்மி வேல்சு தெரிவித்துள்ளார்.


சியோல் என்ற இந்திய இணையத்தளத்துக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இந்தியாவில் எந்த நகரத்தில் இப்பணிமனை திறக்கப்படவிருக்கிறது என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை, ஆனால் சில மாதங்களில் இது திறக்கப்படும் என அவர் கூறினார்.


இப்பணிமனையில் ஆரம்பத்தில் 2 முதல் நான்கு பணியாளர்கள் பணியில் அமர்த்தப்படுவர். உள்ளூர் சமூகத்துக்குப் ப்ணியாற்றுவதே இதன் முக்கிய குறிக்கோள் என வேல்ஸ் கூறினார்.


"பல்மொழி மற்றும் பல மொழிகளிலும் உள்ள தகவல்களைப் பரிமாறுவதே விக்கிமீடியா முன்னே உள்ள குறிக்கோள்," என அவர் கூறினார்.


"பணிமனை அமைப்பதற்கு ஐரோப்பா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகியனவும் கவனத்தில் கொள்ளப்பட்டன. ஐரோப்பா ஏற்கனவே நன்கு அபிவிருந்த்தி அடைந்துள்ளது. ஆப்பிரிக்காவில் தொழில்நுட்பப் பிரச்சினைகள் உண்டு."


"இந்தியா இவ்விரண்டுக்கும் இடைப்பட்டது," என வேல்ஸ் கூறினார்.. "இப்பிராந்தியம் மிக விரைவாக வளர்ந்து வருகிறது மட்டுமல்ல நட்டில் வளர்ந்து வரும் ஆர்வம் என்னைக் கவருகிறது."


விக்கிப்பீடியாவில் 270 மொழிகளில் 91,000 இற்கும் அதிகமானோர் தீவிர பங்களிப்பாளரக்ளாக உள்ளனர் என விக்கிப்பீடியா இணையத்தளம் தெரிவிக்கிறது.


"இந்தியாவில் கட்டற்ற அறிவுக்கு பொதுவாக நல்ல வரவேற்பு உள்ளது," என விக்கிமீடியா நிறுவனத்தின் உலகளாவிய திட்டமிடல் தலைமை அதிகாரி பாரி நியூஸ்டெட் தெரிவித்தார்.


2001 இல் ஆரம்பிக்கப்பட்ட விக்கிப்பீடியா இணையத்தளத்துக்கு மாதம் ஒன்றுக்கு 78 மில்லியன் பேர் செல்கிறார்கள்.


மூலம்[தொகு]