உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவும் அமெரிக்காவும் அணுவாற்றல் ஒப்பந்தம் செய்து கொண்டன

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, சூலை 31, 2010

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள அணுப்பொருள் கம்பியை இந்தியாவில் உள்ள அணு உலைகளில் பயன்படுத்த இந்தியாவுக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதாக ஆசிய செய்திச் சேவை சனிக்கிழமை கூறியுள்ளது.


அணுவாலை

இதே போன்றொரு ஒப்பந்தம் 2008 ஆம் ஆண்டு இந்தியாவில் அமெரிக்கா அணுவுலை ஒன்று கட்டி அமைப்பதாக நிறைவேறியது. பின் அந்த ஒப்பந்தம் அரசியல் சட்ட நெருக்கடியால் கைவிடப்பட்டது.


2008 ஆம் வரை இந்தியா அணுவுலைகளை இந்தியாவிற்கு இறக்குமதி செய்வதில் சட்ட நெருக்கடி ஏற்பட்டு வந்து கொண்டே இருந்தது. தற்போது அந்த நெருக்கடிகள் விலகியதை அடுத்து இந்தியா இது போன்ற அணு எரிப்பொருள் கம்பிகளை இறக்குமதி செய்ய முன் வந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.


இதே போன்று ரசியா மற்றும் பிரான்ஸ் நாடுகளிடும் சில மாதங்களுக்கு முன்பு அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


மூலம்

[தொகு]