இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை உருவாக்கியது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், ஆகத்து 12, 2013

இந்தியா தனது முதலாவது விமானம் தாங்கிக் கப்பலை தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள கப்பல் கட்டுமிடம் ஒன்றில் இருந்து வெள்ளோட்டம் விட்டது.


37,500 தொன் எடையுள்ள ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant) என்ற இக்கப்பல் 2018 ஆம் ஆண்டில் இந்தியக் கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். 2016 ஆம் ஆண்டில் இக்கப்பல் மேலும் பல சோதனைப் பயணங்களை மேற்கொள்ளவுள்ளது.


இவ்வாறான கப்பல்களைத் தயாரிக்கும் அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், உருசியா, மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இப்பட்டியலில் இப்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது.


விக்ராந்தின் முதற்கட்ட நிருமாணப் பணிகள் இன்று திங்கட்கிழமை முடிவடைந்தது. 25 முதல் 30 வரையான மிக்29கே, காமொவ் 31 போன்ற போர் விமானங்கள் இக்கப்பலில் இருந்து ஏவப்படக்கூடியதாக இருக்கும்.


இக்கப்பலின் நீளம் 260மீட்டர்களும் அகலம் 60 மீட்டர்களும் ஆகும். கொச்சின் நகரில் இது நிர்மாணிக்கப்பட்டது. இதன் கட்டுமானம் பணிகள் 2006 நவம்பரில் ஆரம்பமாயின.இக்கப்பல் உயர்-ரக இரும்பைக் கொண்டு உள்ளூரிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]