உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தல் 2012

Checked
விக்கிசெய்தி இலிருந்து


இந்திய குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், பா.ஜ.கட்சி சார்பில் சங்மா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.

தேர்தல் நாள் : 19 சூலை, 2012

சூலை 8:

  • ரவீந்திரபாரதி சங்க தலைவர் பதவியில் இருந்து கடந்த 20-ந் தேதியே பிரணாப் ராஜினாமா செய்துவிட்டார் என்றும், பிர்பூம் கல்லூரியின் தலைவர் பதவியை 2004-ம் ஆண்டே ராஜினாமா செய்துவிட்டார் என்றும் அவ்விரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

சூலை 7:

  • பிரணாப் முகர்ஜி இரண்டு ஆதாயம் தரும் பதவியை வகிப்பதால் அவரின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் சங்மா வலியுறுத்தியுள்ளார்.
  • மேற்கு வங்க முன்னாள் முதல் மந்திரி புத்ததேவ், பிரணாப் முகர்ஜிக்கு மார்க்கிஸ்ட் கம்யூனிச்ட் கட்சியின் ஆதரவு சரியான முடிவே என தெரிவித்தார்.

சூலை 6:

  • "பிரணாபுக்கு எதிரான எனது புகாரை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் உத்தரவு கிடைத்துள்ளது. சட்ட நிபுணர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசித்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வேன்" - சங்மா (பா.ஜ.கட்சி)
  • "பிரணாப்பின் அசல் ராஜினாமா கடிதத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரி விடுப்பில் சென்றதாக கூறுகின்றனர். சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்போம்" - பா.ஜ. மூத்த தலைவர் அலுவாலியா.

மூலங்கள்

[தொகு]