உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய விமானப் படையின் சி-130 ஜே சூப்பர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மார்ச்சு 29, 2014

அமெரிக்க தயாரிப்பும் இந்திய விமானப்படைக்குச் சொந்தமானதுமான சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ் விமானம் நேற்று வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த ஐந்து விமானப் படை வீரர்களும் உயிரிழந்தனர்.


சி-130 ஜே சூப்பர் ஹெர்குலிஸ்

இந்த விமானம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ராவில் இருந்து மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நோக்கிச் செல்லும்போது விபத்துக்குள்ளானது.


மத்தியப் பிரதேசம்-இராஜஸ்தான் எல்லைப் பகுதியில் ஜெய்ப்பூர் நகரில் இருந்து 165 கிமீ தூரத்தில் இவ்விபத்து நிகழ்ந்தது. ஆக்ராவில் இருந்து காலை 10 மணியளவில் வழமையான பயிற்சிக்கு சென்ற போதே விமானம் தரையில் மோதியதாக பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.


இவ்விபத்துக் குறித்து ஆராய அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர் என பேச்சாளர் கோசுவாமி கூறினார்.


ஒரு கோடி ரூபா மதிப்புள்ள சி-130ஜே சூப்பர் ஹெர்குலீசு விமானம் அமெரிக்காவின் லொக்கிட் மார்ட்டின் என்ற தனியார் நிறுவனம் ஒன்றிடம் இருந்து அண்மையில் கொள்வனவு செய்யபட்டதாகும்.


மூலம்

[தொகு]