இந்தி ஒளிவிழியம் மீதான தடை நீக்கம்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், நவம்பர் 7, 2024


புதன் கிழமை ஒரு நாள் என்டிடிவி இந்தியா ஒளிவிழியம் மீது விதிக்கப்படிருந்த தடையை இந்திய ஒன்றிய அரசு நீக்கியது.


செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு இம்முடிவை எடுத்ததாக என்டிடிவி தெரிவித்தது. பதன்கோட் வானூர்தி தளத்தை தீவிரவாதிகள் தாக்கியபோது என்டிடிவி இந்தியா அதை ஒளிபரப்பியதில் குற்றம் கண்டதால் அரசு இவ் ஒளிவிழியத்தை ஒரு நாள் தடை செய்ய முடிவெடுத்தது. சில யுத்தி முறையில் நுணுக்கமான விவரங்களை என்டிடிவி ஒளிவிழியம் ஒளிபரப்பியதாக அமைச்சகம் குற்றம் சாட்டியது.


திங்கள் கிழமை அமைச்சகம் எடுத்த இம்முடிவை என்டிடிவி தன் இணையதளத்தில் வெளியிட்டது. இத்தடை தொடர்பாக என்டிடிவி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் செவ்வாய் கிழமை விசாரிக்க இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தடை முடிவு எடுக்கப்பட்டதாக வெங்கய்யா நாயுடு கூறியிருந்தார்.


இந்திய செய்தியாளர் குழுமம் ஒளிவிழியத்தின் மீதான் இத்தடை தேவையற்றது என்றும் செய்திநிறுவனங்களின் செயலில் தலையிடுவது என்றும் கூறியிருந்தது


ஒன்றிய அரசின் குற்றச்சாட்டுகளை என்டிடிவி மறுத்திருந்தது.


மூலம்[தொகு]