உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தூர்-பாட்னா விரைவு தொடருந்து கான்பூர் அருகே விபத்துக்குள்ளானதில் 110 பேருக்கு மேல் பலி

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, நவம்பர் 20, 2016

இந்தூர்-பாட்னா விரைவு தொடருந்து கான்பூர் அருகே தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் 110 பேருக்கு மேற்பட்டோர் பலியாயினர் 150இ்க்கு மேற்பட்டோர் காயமுற்றனர். மொத்தம் 14 பெட்டிகள் தடம் புரண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கான்பூர் அருகே 65 கிமீ தூரத்தில் உள்ள புக்கிரியான் என்ற இடத்தில் உள்ளூர் நேரம் அதிகாலை 3.10 இக்கு இவ்விபத்து ஏற்பட்டது, விபத்து நடந்த தொடருந்து 2000 பயணிகளுடன் 100 கிமீ வேகத்தில் பயணித்தது.


லக்னோ, மத்தியப் பிரதேச மாநிலம் மற்றும் மஹாராஷ்டிராவை இணைக்கும் இந்தப் பாதை ஒற்றை ரயில் பாதையாக இருப்பதால் பல ரெயில் சேவைகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்த , கிருஷ்ண கேசவ் என்பவர் , விபத்து நடந்த போது மூன்று நான்கு முறை பெரும் அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்ததாகக் கூறினார்.


நான் எஸ்-12 பெட்டியில் பயணித்துக் கொண்டிருந்தேன், அப்போது காலை சுமார் 3 மணி இருக்கும்., நான் விழித்துக்கொண்டேன். . எங்கும் ஒரே கூச்சல் குழப்பமாக இருந்தது. ஆனால் எங்கள் பெட்டியில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை`` என்ற அவர், மேலும்ம் நாங்கள் எல்லோரும் பெட்டியில் இருந்து இறங்கினோம். வெளியே ஒரே கும்மிருட்டாக இருந்த்து. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டிருந்ததையும், சில பெட்டிகள் ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டிருந்ததையும் பார்த்தோம் என்றார்.


"அக்கம்பக்கத்திலிள்ள கிராமங்களிலிருந்து பலர் வந்து சிக்கிக்கொண்ட பயணிகளை வெளியே கொண்டுவர உதவினர்," என்றும் காவலர்கள் ஒரு மணி நேரத்துக்குப் பின் தான் வந்தனர் என்றார்.


தொடருந்தில் 23 பெட்டிகள் இருந்தன. இதில் 12 தூங்கும் வசதியுடையனவாகும்.


மூலம்[தொகு]