இன்டெல் நிறுவனம் கணினியின் மின்னுகர்வை 300 மடங்காகக் குறைக்கத் திட்டம்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

உலகின் பெரிய சில்லு தயாரிப்பு நிறுவனம் இன்டெல் கார்பரேசன், எதிர்கால தொழில்நுட்பங்களின் முன்னோடியாக பத்து ஆண்டுகளில் கணினிகளின் மின் செயல்திறனை 300-மடங்காக உயர்த்தவும், அதேபோல் தரவு பாதுகாப்பு மற்றும் பயனர் முற்றொருமைகள் போன்றவைகளை உறுதி செய்யும் திட்டங்களையும் உருவாக்கி கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது.


இன்டெல்

இன்டெல் வளர்ப்போர் மன்றம் 2011 விழாவின் இறுதி நாளன்று பேசிய அலுவலகத் தலைவர் (இன்டெல் தொழில்நுட்பம்) ஜஸ்டின் ரத்னர், நிறுவனம் கணினியியலை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக மேம்பட்ட செயல்திறம் மற்றும் குறைந்த மின்நுகர்வு ஆகியவை கொண்ட தொழில்நுட்பத்தை உருவாக்கிவருவதாக தெரிவித்தார்.


இந்த ஆண்டு இன்டெல் வளர்ப்போர் மன்ற மாநாட்டின் முக்கிய கருத்தே ஆற்றல் செயல்திறத்தை பற்றியதாகும். இது தொடர்பாக இன்டெல் அலுவலர்கள் பலர் இதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை விளக்கிகாட்டினர். எப்போதும் பெருமளவில் நகர்மை கொள்ளும் கணினி கருவிகளால் ஒளி நுகர்வு நிறைவின் அவசியத்தை முக்கியம் என்று இந்த நிறுவனம் கருதுகிறது.


மேலும் ஜஸ்டின் கூறுகையில், இவ்வாறு மின்னுகர்வை மேம்படுத்தும் பொழுது, ஒன்றிற்கு மேற்பட்ட செயலிகளை பயன்படுத்தும் நுட்பமான பல்லகடு தொழில்நுட்பம் தற்போது கணினியின் செயல்திறம் உயர்வதற்கான சிறந்த முறையியல் என்று ஒற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார்.

மூலம்[தொகு]

Bookmark-new.svg